CARI Infonet

 Forgot password?
 Register

ADVERTISEMENT

View: 6403|Reply: 4

jallikattu is an historical identity of bravery of tamilians...

[Copy link]
Post time 17-1-2012 03:50 PM | Show all posts |Read mode

தமிழர்களின்வீரத்தை பறைசாற்றும் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு!

கூடல் -12 JANUARY, 2011

இயற்கைஇன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும்வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின்மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தானதிருநாள் தை பொங்கல் தினம்ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொருவிவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்தநெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன்சர்க்கரை பொங்கல் படையல் வைத்து,மாவிலை தோரணம் கட்டி இயற்கையையும்,சூரியனையும் வழிபடும் தமிழர் திருநாள் தைபொங்கல். தை பொங்கல் விழாதமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழரின்வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு போன்ற வீரவிளையாட்டுகள் தை மாதம் முழுவதும்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும்.ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயேஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையகல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

காளைகளைஅடக்கும் திருவிழா ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற அயல்நாடுகளிலும் நடைபெற்றுவருகிறது. அது கூர்மையான வாளைக்கொண்டு காளையை காயப்படுத்தி அடக்கும்விளையாட்டுகளாகும். ஆனால் தமிழகத்தில் கொம்புகள்கூர்சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டுதனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது.

4 ஆயிரம்ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளிநாகரீக காலத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீககாலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதையபாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில்பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில்கல்லால் ஆன ஒரு முத்திரையும்அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டுநிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டுஉள்ளது. ஒரு காளை மாடுதன்னை அடக்க முயலும் வாலிபர்களைமுட்டி தூக்கி வீசுவது போலவும்,வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்தமுத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச்சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் 4 ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில்இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும்உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில்எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்தமுத்திரை அஸ்கோ பர்போலா என்பவர்எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ணபுகைப்படமாக இடம் பெற்றுள்ளது.

மேலும்தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்தியஎழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றிஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதைகடந்த 1977ஆம் ஆண்டு இந்தியதொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டது. இந்த முத்திரை கி.மு. 2000-ம் ஆண்டை சேர்ந்தது.இதை பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீககாலத்தில் நடைமுறையில் இருந்த ஜல்லிக்கட்டை இந்தமுத்திரை பிரதிபலிப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இதில் உள்ள படத்தை வைத்துஇருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசாரார் ஒரு காளை ஒன்றுக்குமேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள்.2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒருவீரர் காளையை பிடிக்க முயல்வதுபோலவும், மற்றொருவர் பல்டி அடிப்பது போலவும்,5-வது நபர் தரையில் விழுந்துகிடப்பது போலவும் இந்த சித்திரம்அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.

தமிழர்இலக்கியத்தில் "கொல்லேறு தழுவல்" என்று பெயர் கூறிகாளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளைகொன்று தூக்கி எறியும் வகையில்வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்தகாளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையேமென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம்சித்தரிக்கிறது.

இன்றளவும்இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறுதழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர்.ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும்,அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீரசோதனைதான்.

தமிழ்நாட்டில்ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கியகாளையர் எவரும் அடுத்த ஆண்டும்இறங்கி தங்கள் திறனை தொடர்ந்துநிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரைஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு,தங்கள் உயிரை பணயமாக வைத்துதமிழரின் வீர மரபை தொடர்ந்துவருகின்றனர்.

ஜல்லிக்கட்டுநடக்கும் பல ஊர்களில் ஒருகாலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டிபோட்டவர்கள், இன்று வயது முதிர்ந்தநிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும்நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டுபாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டுவீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது.

ஜல்லிக்கட்டு!தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றட்டும்.

Reply

Use magic Report


ADVERTISEMENT


Post time 15-3-2012 01:11 AM | Show all posts
translate boleh tak uols?

Rate

1

View Rating Log

Reply

Use magic Report

 Author| Post time 16-4-2012 10:51 AM | Show all posts
translate boleh tak uols?
freakygirl Post at 15-3-2012 01:11



   Kalau nak translate satu persatu memang susah... ianya berkaitan dengan permainan yang melambangkan keberanian iaitu bermain  dengan serangan lembu jantan yang ganas. Permainan Jallikattu bermaksud kumpulan lelaki perlu menyerbu dan menyerang lembu agar tidak terkena hentakkan tanduknya dan mengelak dari serangganya, ianya merupakan permainan yang boleh meragut nyawa dan ianya sangat digemari oleh kaum india di India untuk memilih calon suami yang berani dimana boleh mempertahankan isterinya dimana-mana jua.
Reply

Use magic Report

Post time 17-4-2012 12:27 AM | Show all posts
Reply 3# kirhmuru


    sampai meragut nyawa tuh. scary nye. oh okay, bkn yg kabadi2 tu ke? slalu cte tamil kan de men kabadi? hehehehehe.
Reply

Use magic Report

 Author| Post time 17-4-2012 03:56 AM | Show all posts
Reply  kirhmuru


     sampai meragut nyawa tuh. scary nye. oh okay, bkn yg kabadi2 tu ke? ...
freakygirl Post at 17-4-2012 00:27



   Kabadi itu permainan yang juga melibatkan keberanian tetapi bukan melibatkan lembu. Kabadi ini sebenarnya telah diadaptasikan kepada permainan galah panjang yang dimainkan oleh orang Melayu, hasil dari kesinambungan adat orang india dari segi makanan, pakaian, adab, permainan, bahasa dan sebagainya oleh kaum India. Permainan kabadi dan galah panjang hampir sama tetapi yang asalnya ialah kabadi yang termasyur di persada dunia. Sila google dan baca berkenaan kabadi ini untuk pemahaman yang lebih lanjut.
Reply

Use magic Report

You have to log in before you can reply Login | Register

Points Rules

 

Category: Tamil


    ADVERTISEMENT



     

    ADVERTISEMENT


     


    ADVERTISEMENT
    Follow Us

    ADVERTISEMENT


    Mobile|Archiver|Mobile*default|About Us|CARI Infonet

    7-5-2024 03:39 PM GMT+8 , Processed in 0.091039 second(s), 35 queries .

    Powered by Discuz! X3.4

    Copyright © 2001-2021, Tencent Cloud.

    Quick Reply To Top Return to the list