CARI Infonet

 Forgot password?
 Register

ADVERTISEMENT

View: 7086|Reply: 0

கடந்த ஜென்மம&a

[Copy link]
Post time 19-1-2012 02:11 PM | Show all posts |Read mode
Post Last Edit by kirhmuru at 20-1-2012 08:05

கடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா? இல்லையா?ஆன்மிகநோக்கிலும், அறிவியல்
நோக்கிலும் கடந்த ஜென்மம் உண்டா?இல்லையா? என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். ராமாயணம், மகா பாரதம் போன்றபுராணங்கள் மறுபிறப்பைப் பற்றிக் என்ன கூறுகிறது?விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதுபற்றி தெரிந்து கொள்வோம்.ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் புனர்ஜென்மங்களைப்பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள்மிகவும் சுவையானவை. பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை.பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு சம்பவங்களில்நிறைய உண்மைகளை உணரலாம்

சீதையின் முன் ஜென்மம்!

முதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம்! சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, முன் ஜன்மாந்தரத்தில்எப்படிப்பட்ட பாபம் என்னால்செய்யப்பட்டதோ!ஆகவேதான் கொடுமை கொண்டு மிகவருத்துகின்ற இந்தத் துயரம் என்னால்அனுபவிக்கப்படுகிறது (கீத்ருஸம்துமயா பாபம் புராஜன்மாந்தரேக்ருதம் / யேநேதம் ப்ராப்யதே துக்கம்மயாகோரம் ஸுதாருணம் / 26ம் அத்தியாயம் 18ம்சுலோகம்) என்று கூறுவது நம்மைஆச்சரியத்தில் ஆழ்த்தும்! சீதைக்கு ஏது முன் ஜென்மம்என்று ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும்ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம்.ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில்ஹனுமன், சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்குயோசித்து விட்டு சீதை கூறுகிறாள்.அவர்கள் வெறும் ஊழியர்கள்தான் ! அவர்கள்மீது ஏன் கோபப்படுகிறாய்! நான்அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில்செய்த செயல்களின் விளைவுதான் என்று திட்டவட்டமாக கூறுகிறாள்.(யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம், 39ம்சுலோகம்)

சீதையின் முன்ஜென்மக்

கதைசுருக்கமாக இதுதான். ஒருமுறை ராவணன் பூமியைச்சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒருமாபெரும் அழகியைப் பார்க்கிறான். காம வசப்பட்ட ராவண ன்இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னைமணம் புரிய வேண்டுகிறான். அந்தஅழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின்புதல்வி தான் என்றும், வேதங்களின்பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னைஅடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரேஎன்று தன் தந்தை கருதியதாகவும்,இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்யஅரசன் சம்பு இரவில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனதுதாயார் அவருடன் சிதை ஏறியதாகவும்,அதன் பின்னர் தந்தையின் ஆசையைநிறைவேற்ற
நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.


யார் அந்த விஷ்ணு? என்றுஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதிதன் கையைத் தூக்கினாள். அதுவாளாக மாற தன் கூந்தலைஅறுத்துக் கொண்டு தீயை மூட்டி,நான் இனியும் உயிர் வாழஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக்கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என்தவத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே,அக்னியில் புகுந்து என் தவ வலிமையால்அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறிஅக்னியில் புகுந்தாள். பின்னர் மீண்டும் ஒருதாமரை மலரிலிருந்து தோன்றினாள். அவளை மீண்டும் பிடித்தராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டுவந்து தனது மந்திரியிடம் காண்பித்தான்.அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள்இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள்என்று கூறினார். இதனால் ராவணன் அவளைகடலில் தூக்கி எறிந்தான். கரையைநோக்கி வந்த அவள் ஒருயாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன்உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழுசாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால்சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள்.ராமனை மணம் புரிந்தாள். கிருதயுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில்சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு ரகசியம் பற்றிய கதையின்சுருக்கம் இது தான்!

உத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்!

சாதாரணமாக ராம பட்டாபிஷேகத்துடன் சுபம்என்று நாம் ராமாயணத்தை முடித்துவிடுவதால் உத்தர காண்டத்தில் உள்ளஅரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ளமுடியாமல் போய் விடுகிறது. வால்மீகிஅரிய முன்பிறப்பு ரகசியங்களையும், ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பலரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவைபூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர்ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை) உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார்.சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன்,விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவிபற்றிய சம்பவங்கள் சுவையானவை. படித்து அறிந்து கொள்ளவேண்டியவை.

இந்து மதத்தின் அடிநாதமான உண்மை மறுபிறப்பு!

செமிடிக் மதங்கள் என்று கூறப்படும்யூத மதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம்ஆகியவற்றிற்கும் இந்து மதத்திற்கும் உள்ளஅடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம். மனிதப்பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை,தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது.அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர்என்பது இந்து மதம் கூறும்உண்மை. மாறாக செமிடிக் மதங்கள்ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்குஉண்டு. அவர் இறந்தவுடன் தீர்ப்புநாள் வரும் வரை காத்திருந்துதீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடையவேண்டும் என்று கூறுகின்றன. தர்க்கரீதியாகசிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவிதான்ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர்நீண்ட ஆயுளுடன் இருக்க, பிறந்த குழந்தைஒன்று ஏன் மரிக்க வேண்டும்?ஒருவர் ஏன் செல்வந்தராகவும், இன்னொருவர்ஏழையாகவும் இருக்க வேண்டும்? என்பனபோன்ற ஏராளமான கேள்விகள் எழுந்துவிடை காண முடியாமல் தவிக்கவேண்டியிருக்கிறது.

மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்!

பிளேட்டோ, பித்த கோரஸ், லியனார்டோடா வின்ஸி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்,எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ,ஹென்றி ஃ போர்டு, சி.ஜே.ஜங், உள்ளிட்டஏராளமான அறிஞர்கள் இந்து மதத்தின் அடிப்படைக்கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள்! அன்னி பெஸண்ட் அம்மையார்இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்துரீ இன்கார்னேஷன் என ஒரு அரியபுத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தைவிளக்கியுள்ளார்.

விஞ்ஞானியின் ஆராய்ச்சி!

வர்ஜீனியா மாநில பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த பிரபல விஞ்ஞானியான ஐயான்ஸ்டீவன்ஸன் 1040 புனர் ஜென்ம கேஸ்களைஆராய்ந்து இது உண்மைதான் எனஆய்வு முடிவில் கூறியுள்ளார்! மிகவும் பிரபலமான எட்கர்கேஸ் 2000 பேரின் பூர்வஜென்மத்தைக் கூறிஅவை சரி பார்க்கப்பட்டு அனைவரையும்பிரமிப்பின் உச்சிக்கே ஏற்றியிருக்கிறது.

Reply

Use magic Report

You have to log in before you can reply Login | Register

Points Rules

 

Category: Tamil


    ADVERTISEMENT



     

    ADVERTISEMENT


     


    ADVERTISEMENT
    Follow Us

    ADVERTISEMENT


    Mobile|Archiver|Mobile*default|About Us|CARI Infonet

    8-5-2024 12:28 AM GMT+8 , Processed in 0.048789 second(s), 24 queries .

    Powered by Discuz! X3.4

    Copyright © 2001-2021, Tencent Cloud.

    Quick Reply To Top Return to the list